Tuesday, November 26, 2019

தேர்தல் முடிவடைந்த பின்னர் 42 முறைப்பாடுகள் - கஃபே அமைப்பு தெரிவித்துள்ளது.


கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் இதுவரையான காலப்பகுதியில் 42 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கஃபே அமைப்பு தெரிவித்துள்ளது.

கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

தேர்தலுக்கு முன்னரான காலத்தில் காணப்பட்ட சட்டத்தை மதிக்கும் செயற்பாடு மற்றும் அமைதியான நிலை, தேர்தலுக்கு பின்னர் முற்றிலும் மாறிவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் அதிகளவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் முடிவடைந்து ஒருவார காலப்பகுதிக்குள், நாட்டின் பல பகுதிகளில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதோடு, வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டதாகவும்  மனாஸ் மக்கீன் மேலும் கூறியுள்ளார்.

எனினும், கடந்த ஜனாதிபதிதி தேர்தலுடன் ஒப்பிடுகையில், இம் முறை குறைந்தளவான முறைப்பாடுளே பதிவாகியுள்ளதாக கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured