ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கூட்டணி அரசாங்கத்தின் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விஜேராமாவில் நேற்று இரவு கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதேவேளை டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி கூடவுள்ள நாடாளுமன்ற குழுக் கூட்டம் மற்றும் அமைச்சுகள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.