Thursday, September 7, 2023

தனது, நான்கு வயது மகளை தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சிறுமியின் தாயும், தாயின் சட்டவிரோதமான கணவனும் கைது.


(மரதன்கடவல நிருபர்.என்.எம்.சல்மான்) 


செய்யப்பட்டுள்ளனர் என தொரட்டியாவ பொலிஸார் தெரிவித்தனர். 
சந்தேகநபர்களான தம்பதியினர் குருநாகல் அலகொல்தெனிய மோடர்வத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

சிறுமியின் முகம், முதுகு மற்றும் கைகால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன் தாக்குதலால் அவரது கண் பகுதி சேதமடைந்தது.
வீட்டுக்குள் வைத்து சிறுமியின் மீது பல நாட்களாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான தாயாருக்கும் தவறான கணவணுக்கு எட்டு மாதக் குழந்தையொன்று இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

http://www.max24news.com
2023.09.07
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured