Tuesday, December 5, 2017

குடாவெல்ல மக்கள் வங்கியில் கொள்ளை

குடாவெல்ல மக்கள் வங்கிக் கிளையில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (05) காலை 9.50 மணியளவில், மோட்டார் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாதோரால், தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாவெல்ல மக்கள் வங்கிக் கிளையில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
முழு முகத்தையும் மறைக்கும் வகையிலான தலைக்கவசம் அணிந்து வந்த குறித்த நபர்கள், வங்கியை கொள்ளையிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதன்போது, கொள்ளையர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில், வங்கிக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் காயத்திற்குள்ளாகி தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொள்ளையிடப்பட்ட பணம் தொடர்பில் இது வரை அறிவிக்கப்படாத நிலையில், தப்பிச் சென்ற சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் தங்காலை பொலிசார், விசேட குழுக்கள் அமைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured