Sunday, December 10, 2017

பூட்டிய வீட்டுக்குள் அழுகிய சடலம்!

மாத்தறையில், வீடொன்றினுள் இருந்து இறந்து பல நாட்களான ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள் தகவல் தெரிவித்ததையடுத்து அங்கு சென்ற பொலிஸார், வீட்டின் பூட்டியிருந்த கதவை உடைத்துத் திறந்து உள்ளே சென்று ஆராய்ந்தனர்.
அப்போது, வீட்டின் படுக்கை அறையில் இருந்து, அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் கண்டெடுத்தனர்.
அந்தச் சடலம் அந்த வீட்டில் வசித்த 64 வயது நபருடையது என்றும் தலையில் கடுமையாகத் தாக்கப்பட்டே அவரது உயிர் பிரிந்திருக்க வேண்டும் என்றும் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
பொலிஸார் விசாரணையைத் தொடர்கின்றனர். எனினும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
Image result for dead body
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured