Sunday, March 25, 2018

கெக்கிராவ – மகவெவ பிரதேச மக்களின் குடி நீர் பிரச்சினை அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் மூலம் தீர்வுக்கு வந்தது.


சுமார் 150 இற்கும் அதிகமாண சிங்கள குடும்பங்கள் வசிக்கின்ற, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்க்கிய கிராமமே கெக்கிராவ பிரதேச சபைக்கு உட்பட்ட மகவெவ கிராமம். இக்கிராமவாசிகள் பல வருடங்களாக குடி நீர் பிரச்சினையை எதிர் நோக்கி வந்துள்ளனர்.

இவர்களது பிரச்சினைய அறிந்து இன, மத, கட்சி பேதங்களை மறந்து அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் இப்பிரதேச மக்களுக்கு சில கிணறுகளை அமைத்துக்கொடுத்து இவர்களது குடி நீர் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுத்துள்ளார். இக்கிணறுகளை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று 25.03.2018 நடைபெற்றது.

செழிப்பானதொரு இலங்கையை உருவாக்குவதற்கு இன, மத, கட்சி பேதங்களை மறந்து நாம் அனைவரும் ஒன்றாய் கை கோர்க்க வேண்டும் என்றும், இன ஒற்றுமையை மேம்படுத்த தன்னாலியன்ற அனைத்து முயற்சிகளையும் தான் மேற்கொள்வதாகவும் இந்நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தெரிவித்தார்.

இனவாதம் தலைவிரித்தாடும் இக்காலகட்டத்தில் இன ஒற்றுமையை பலப்படுத்தும் வகையில் இவ்வேலைத்திட்டம் அமையப்பெற்றுள்ளதாகவும், முஸ்லிம் தலைமைகள் மீது எங்களுக்கு ஓர் மரியாதையும், அன்பும் உருவாகியுள்ளது என்றும் குறித்த நிகழ்வில் பங்கேற்ற கிராம வாசிகள் தெரிவித்தனர்.








Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured