கெபித்திகொல்லாவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அட்டவீரவெவ எனும் மிக பின்
தங்கிய கிரமாத்தில் அமையப்பெற்றுள்ள அ/முஸ்லிம் அட்ட வீரவெவ
வித்தியாலயத்திற்கு புதிய வகுப்பறை ஒன்றை
அமைத்துக்கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று 2018.04.27 பாடசாலை அதிபர் ஏ. நிஜாம் தலைமையில்
நடைபெற்றது.
அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் மற்றும் அல்-ஹிமா சமூக
சேவைகள் அமைப்பின் செயலாளர் நூறுல்லாஹ் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க குவைத் நாட்டை சேர்ந்த முஷின் அல் ஒதைபி என்பவர்
இக்கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான நிதியினை வழங்குவதற்கு முன்வந்துள்ளார்.
இந்நிகழ்வில் அதிதிகளாக அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக்
ரஹுமான், குவைத் நாட்டை சேர்ந்த முஷின்
அல் ஒதைபி, அல்-ஹிமா சமூக சேவைகள் அமைப்பின் செயலாளர் நூறுல்லாஹ், வலயக்கல்வி
பணிப்பாளர் பியரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர் இஷாக் ரஹுமான் அங்கு உரையாற்றுகையில் ,
நிதிப்பிரச்சினை மற்று, இனவாதம் என்பன நாட்டில் தலை
விரித்தாடிக்கொண்டிருக்கும் இக்காலப்பகுதியில் நமது சமூகத்துக்கென்று ஓர் சேவையை
அரசிடமிருந்து மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதானது மிகவும் சிரமமான ஓர் காரியமாக
இருக்கின்றது.
எது எவ்வாறிருந்தாலும் என்னை வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பி வைத்த
மக்களுக்கு ஏதேனும் செய்தாகவேண்டுமென்ற ஓர் நல்லெண்ணத்தோடு அல்-ஹிமா சமூக சேவைகள்
அமைப்புடன் இணைந்து குவைத் நாட்டுக்கு ஓர்
விஜயத்தை மேற்கொண்டு இப்பாடசாலைக்கு ஓர் புதிய வகுப்பறை கட்டிடத்தை
நிர்மாணிப்பதற்கான நிதியினை பெற்று வந்துள்ளேன்.
இப்பிரதேச மக்கள் ஒற்றுமையோடு ஒன்று பட்டதன் மூலமே இன்று இந்த கட்டிடம்
இப்பின்தங்கிய பாடசாலைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இதேபோல் ஒவ்வொரு பிரதேச மக்களும்
ஒன்றிணைந்து ஒற்றுமையாக செயல்பட்டால் நாமும், நமது ஊர்களும் கல்வியிலும் சரி,
பொருளாதாரத்திலும் சரி முன்னேரிவிடலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஊடகப்பிரிவு - பா.உ.இஷாக் ரஹுமான்