Saturday, June 2, 2018

சகல இன மக்களதும் ஒற்றுமைக்கு வலுச்சேர்க்கும் ARM. தாரிக் ஹாஜியாரின் வருடாந்த இப்தார் நிகழ்வு.


அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அனுராதபுர மாவட்ட இணைப்பாளரும் ARM. நிறுவனத்தின் உரிமையாளருமான தேசமான்ய தாரிக் ஹாஜியாரினால் வருடந்தோறும் ரமழான் மாதத்தில் நடாத்தப்படும் இப்தார் நிகழ்வு இன்று நாச்சியாதீவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்றது.

அனுராதபுர மாவட்டத்தில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகர்கள், பொலிஸ் அதிகாரிகள், சமய தலைவர்கள் உட்பட அனுராதபுர மாவட்டத்திலுள்ள  பல பிரதேசத்திலிருந்தும் சகல இன மக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அனைத்து இன மக்களையும் ஒன்று சேர்த்து இடம் பெற்ற இவ் இப்தார் நிகழ்வானது அனுராதபுர வாழ் சகல இன மக்களதும் ஒற்றுமைக்கு வலுச்சேர்க்கும் நிகழ்வாக அமையப்பெற்றது என்பதில் ஐயமில்லை.

ஐ.எம்.மிதுன் கான்.

























Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured