இக்காலக்கட்டத்தில் இந்நாட்டு பெண்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
காத்தான்குடி பிரதேசத்தில் நேற்று (29) இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், இந்நாட்டு பல்கலைக்கழகங்களில் 70 சதவீதம் பெண்கள் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள்.
எனினும், 31 சதவீதமானவர்களே தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்கள் பாரிய பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
எமது நாட்டில் 638 கருக்கலைப்புகள் இடம்பெறுகின்றன. பெண்களுக்கு பாதுகாப்பற்ற வாழ்வொன்று உரித்தாகியுள்ளது.
கணக்கெடுப்பொன்றில் இலங்கையில் 90 சதவீதமான பெண்கள் பொது போக்குவரத்தில் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதில் நூற்றுக்கு 70 சதவீதமானவை பாலியல் ரீதியான துன்புறுத்தல்களாகும். இது நியாயமானதா?
பெண்கள் இச்சமூகத்தில் பாரியளவில் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.
இதற்காக புதிய அரசியல் ஒன்று தேவை.
எல்லோரும் சமத்துவத்துடனும் சுதந்திரத்துடனும் வாழக்கூடிய நாடு ஒன்றை நாம் உருவாக்க வேண்டும்.
எனினும், கடந்த 71 ஆண்டுகளாக ஆட்சியாளர்கள் அவ்வாறான நாட்டை உருவாக்க வில்லை என்று அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.