
காணாமல் போன மீனவர்கள் பற்றிய தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றதை அடுத்து ஊடகவியலாளர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (8) தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அமைச்சரை கேட்டபோது மேற்கண்டவாறு கூறினார்.
கடந்த 18 ஆம் திகதி காணாமல் போன சாய்ந்தமருது மாளிகைகாடு மற்றும் காரைதீவு பிரதேசத்தை சேர்ந்த மீனவர்களும் இயந்திரப் படகும் தற்போது திருகோணமலையில் இருந்து 154 கிலோ மீட்டர் தூரத்தில் இந்திய கடல் எல்லையில் கண்டுபிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகி இருந்தன.
இவ்வாறு காணாமல் சென்று கண்டுபிடிக்கப்பட்ட மீனவர்களை கடற்படையினரின் உதவியுடன் சொந்த ஊருக்கு அழைத்து வர அப்பகுதி மீனவ சங்கங்கள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் ஊடகவியலாளரின் கேள்விக்கு தொடர்ந்து பதிலளித்த அவர் காணாமல் போன மீனவர்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் நீங்கள் கேட்டதன் பின்னரே தனக்கு குறித்த விடயம் தெரியவருவதாகவும் இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடுவதாகவும் குறிப்பிட்டார்.
-ada derana-