Tuesday, October 8, 2019
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பதில் தலைவராக ரோஹண லக்ஷமன் பியதாச நியமனம்
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பதில் தலைவராக பேராசிரியர் ரோஹண லக்ஷமன் பியதாச நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் ஊடக பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இந்த நியமனம் ஜனாதிபதி தேர்தல் நிறைவடையும் வரையில் செல்லுபடியாகும் என அவர் குறிப்பிட்டார்.
கட்சியின் செயற்பாடுகளை சுயாதீனமாக நடாத்திச் செல்ல கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ரோஹண லக்ஷமன் பியதாச பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பேராசிரியர் ரோஹண லக்ஷமன் பியதாச ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Location:
Kekirawa, Sri Lanka