Sunday, October 20, 2019

எனக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இடம்பெற்று வருகின்றது



தனக்கு இதுவரைக்கும் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும், தமக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இடம்பெற்று வருகின்றது எனவும் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

வாழைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க கட்டடத்தில் இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தனக்கு இதுவரைக்கும் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் தேர்தல் ஆணையாளருக்கு எழுத்து மூலம் தெரிவித்திருந்தும் எது விதமான ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை.

தமக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இடம்பெற்று வருகின்றது. போட்டியிடும் 35 வேட்பாளர்களுக்கும் பாராபட்சமின்றி பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். கட்டுப்பணம் செலுத்திய நேரமுதல் தமக்கு கைத் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து தமது கைத்தொலைபேசியினை சிறிது நாட்கள் இயங்காத நிலையில் நிறுத்தி வைத்திருந்தேன்.

சிங்கள பௌத்த தேசம் சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்கு பாதுகாப்பு வழங்குமே தவிர சிறுபான்மையினருக்கு வழங்காது. எதிர்வரும் செவ்வாய்கிழமையன்று வேட்பாளர்களுக்கான சந்திப்பொன்று தேர்தல் ஆணைக்குழு தவிசாளரினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அச்சந்திப்பில் குறித்த விடயம் தொடர்பாக தெளிபடுத்தவுள்ளேன்.

அடுத்த கட்டமாக 23 ஆம் திகதி எனது எதிர்கால அரசியல் நகர்வு தொடர்பாக என்ன செய்யப் போகின்றேன் என்பதனை கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு அறிவிக்கவுள்ளேன் என்று தெரிவித்தார்.
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured