இளம் ஊடகவியலாளர்களுக்கான மீடியாகோர்ப்ஸ்புலமைப்பரிசில் செயற்றிட்டமானது இலங்கையின் பலபிரதேசங்களை மற்றும் ஊடக நிறுவனங்களைபிரதித்துவப்படுத்தும் சுமார் 20 (9–சிங்களம், 4–தமிழ், 7-முஸ்லீம்) இளம் ஊடகவியலாளர்களுடன் கடந்த பெப்ரவரிமாதம் 6ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரைநீர்கொழும்பில் இடம்பெற்றது.
இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தினை இளைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்குடனும்கைபேசியினை பயன்படுத்தி கதைகூறும் “மோஜோ”பயிற்சியினை உள்ளடக்கியதாகவும் இச்செயற்றிட்டமானதுஇலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றத்தினால்(SDJF) வடிவமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச் செயற்றிட்ட அங்குராப்பண நிகழ்வானது SDJFநிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் பேராசிரியர் பத்மஸ்ரீவணிகசுந்தர அவர்களின் வருகையினை தொடர்ந்துஆரம்பிக்கப்பட்டது. இச் செயற்றிட்டம் தொடர்பான அறிமுகம்மற்றும் மேலதிக விளக்கங்கள் SDJF செயற்றிட்ட ஊழியர்கள்ஊடக தெளிவுபடுத்தப்பட்டதுடன் இந்த பயிற்சியில் பங்கு பற்றிய ஊடகவியலாளர்களுக்கு மோஜோ கிட்ஸ் (MoJo kits)களும் வழங்கப்பட்டன.
இச் செயற்றிட்டமானது அனுபவம் வாய்ந்த வளவாளர்களானMr. T. M. G சந்திரசேகர, specialist, Strategic Communications, ICTA, Mr. ஷான் விஜேதுங்க, Director Communications, இலங்கை பாராளுமன்றம், Ms. தாரிணி பிரிஸ்சிலா, பத்திரிகைஆசிரியர், Bakamoono.lk, Mr. ஷிஹார் அனீஸ், ஆய்வாளர், Global Press Journal, Mr. K. C சாரங்க, செய்தி பொதுமேலாளர், TV தெரன, Mr. மொஹமட் பைறூஸ், பத்திரிகைஆசிரியர், விடிவெள்ளி, Mr. கபில ராமநாயக, MoJoபயிற்சியாளர் மற்றும் SDJF நிறுவன வளவாளர்களானமொஹமது அஸ்வர் மற்றும் ருவான் போகமுவ ஆகியோரினால்நடாத்தப்பட்டது.
பயிற்சியின் ஒரு பகுதியாக ஊடகவியலாளர்கள் அனைவரும் அண்மையில் உள்ள கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தி ஒரு வீடியோ கதை உருவாக்குவதற்கான பிரயோக பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன் ஒவ்வொரு ஊடகவியலாளரும் இறுதியில் ஒரு வீடியோ கதையினை உருவாக்கினார். அதனடிப்படையில் செயற்றிட்டமுடிவில் குறித்த கிராமத்தில் காணப்படும் சமூக பிரச்சினைகள்சம்பந்தமான 20 வீடியோ கதைகள் உருவாக்கப்பட்டன.
இப் பயிற்சியினைத் தொடர்ந்து பங்குபற்றியஊடகவியலாளர்கள் வேறுபட்ட கலாசார பின்னணியினைகொண்ட ஏனைய ஊடகவியலாளர்களுடன் சோடிகளாக 7 நாட்கள் கொண்ட கள விஜயத்தினை மேற்கொண்டு குறித்தசமூகத்தின் கலாச்சாரம், நம்பிக்கை மற்றும் செயற்பாடுகளைபுரிந்துகொண்டு அவர்கள் எதிர்கொள்ளும் சமூகப்பிரச்சனைகளை பல் ஊடக (Multi Media) கதைகளாகஉருவாக்கி அவற்றை சமூக ஊடகங்களினுடாகவெளியிடுவார்கள்.
IREX நிறுவனத்தின் பிரதிநிதிகளான Ms. Alicia Phillips Mandaville, the Vice President of Global Program மற்றும் Ms. Jean Mackenzie, Chief of Party, IREX Sri Lanka, மற்றும் பலர்செயற்றிட்டத்தின் போது வருகை தந்து கதை உருவாக்கும்செயற்பாடுகளை அவதானித்து, ஊடகவியலாளர்களுடன்கலந்துரையாடல்களில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
மீடியாகோர்ப்ஸ் செயற்றிட்டத்தினுடாக இதுவரை சுமார் 112இளம் ஊடகவியலாளர்கள் பயனடைந்துள்ளமை விசேடஅம்சமாகும். இவ் MediaCorps புலமைப்பரிசில் திட்டமானது ஓர்ஜனநாயக இலங்கைக்கான ஊடக வலுப்படுத்தல் (MEND) எனும் செயற்றிட்டத்தின் கீழ் USAID மற்றும் International Research and Exchanges Board (IREX) நிறுவனங்களுடன்ஒண்றிணைந்து இலங்கை அபிவிருத்திக்கானஊடகவியலாளர் மன்றத்தினால் (SDJF) நடாத்தப்பட்டதுஎன்பதும் குறிப்பிடத்தக்கது. மேலதிக தகவல்களுக்கு எமதுஇணையத்தளத்தினை பிரவேசியுங்கள் www.Ldjf.org