Saturday, February 22, 2020

பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானிடம் ஒரு கோடி ரூபாய் கப்பம் கோரிய நபர் கைது.


அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களுக்கு எதிராக முகனூல் ஊடாக சேறுபூசும் வேலைகளில் ஈடுபட்டும் அவற்றை நிறுத்தவேண்டுமென்றால் ஒரு கோடி ரூபாய் பணம் தரவேண்டும்என்றும் பாராளுமன்ற உறுப்பினரிடம் கப்பம் கோரிய மக்கள் சேவை அமைப்பின் தலைவர் ரிஷாம் மரூஸ்என்பவர் நேற்றிரவு 2020.02.21 மடாட்டுகம பிரதேசத்தில் வைத்து அனுராதபுரம் பொலிஸ் குற்றத்தடுப்புபிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபர் கொலன்னாவ வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் தற்பொழுது கெக்கிராவபண்டாரபொத்தான எனும் பிரதேசத்தில் திருமணம் செய்து வசித்து வருவதாகவும் விசாரணைகளின்போதுதெரியவந்துள்ளது.

கடந்த ஜனவரி 28 ஆம் திகதி முதல் குறித்த நபர் முக நூலில் பாராளுமன்ற உறுப்பினரைபோலிக்குற்றச்சாட்டுக்களை சுமத்தியும் தகாத வார்த்தைகளாலும் வீடியோ மூலம் விமர்சித்தும் வந்தார். இதுதொடர்பில் அவர் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களை தொலைபேசி ஊடாகதொடர்புகொண்டு நேரில் சந்திக்க நேரம் கேட்டு கடந்த ஜனவரி 30 ஆம் திகதி மடாட்டுகம பிரதேசத்தில்உள்ள வீடு ஒன்றில் வைத்து நேரடியாக சந்தித்து பேசினார். இவ்வாறு நேரில் சந்தித்து பேசும்பொழுதே ஒருகோடி ரூபாய் கப்பம் கோரியிருக்கின்றார்.

இது தொடர்பில் கடந்த 13 ஆம் திகதி அன்று பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்கள்அனுராதபுரம் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு ஒன்றினை செய்திருந்தார். 



அதையடுத்து அனுராதபுர பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் சந்த சிரிஅவர்களின் அறிவுருத்தலுக்கு அமைய ஒரு கோடி ரூபாயின் ஒரு பகுதி தொகையினை நேற்றிரவு 9.30 மணியளவில் மடாட்டுகம பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் வைத்து வழங்கும்போது தலைமை ஆய்வாளர் சந்தசிரி அவர்களின் தலைமையில் 5 பேர் கொண்ட அணியினரால் கைது செய்யப்பட்டு இன்று 22.02.2020 கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டார்.

இதன்போது சந்தேக நபர் ரிஷாம் மரூஸின் மீது பாராளுமன்ற உறுப்பினரிடம் கப்பம் கோரியமை, பாராளுமன்றஉறுப்பினருக்கு அவப்பெயர் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு மார்ச் மாதம் 5 ஆம்திகதி வரை விளக்கமரியலில் வைக்கப்பட்டுள்ளார்.

.எம்.மிதுன் கான்
கெக்கிராவ,
கனேவல்பொல.





Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured