(மரதன்கடவல நிருபர்.என்.எம்.சல்மான்)
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பண்ணையாளர்கள் 2500 பேருக்கு அதிகமானோர் உள்ளனர்.
கடந்த ஆறு மாதங்களாக மஸ்கெலியா மிருக வைத்திய சாலையில் மிருக வைத்தியர் இன்றி இப் பகுதியில் உள்ள அனைத்து பண்ணையாளர்களும் சொல் என்னா துயரில் உள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் மேலும் கூறுகையில்;
இப் பகுதியில் கடந்த சில மாதங்களாக 40க க்கு மேற்பட்ட கறவைபசுக்கள் நோய்யுற்று முறையான வைத்திய வசதிகள் இன்றி மடிந்து உள்ளன.
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 6000 பசுக்கள் உள்ளது எனவும் நாளாந்தம் 15000 லீட்டர் பால் உற்பத்தி செய்ய படுகிறது எனவும் இதனால் 200 க்கு மேற்பட்டோர் பால் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வைத்திய வசதிகள் இன்றி பசுக்கள் மரணித்ததால் பண்ணையாளர்கள் இந்த தொழிலை கை விடும் நிலை தோன்றியது.
அவ்வாறு கை விடும் பட்சத்தில் 200 பேர் தொழில் இலக்க நேரிடும்.
தற்போது மஸ்கெலியா மிருக வைத்திய சாலைக்கு நுவரெலியா மிருக வைத்திய சாலையில் உள்ள சிரேஸ்ட்ட வைத்திய அதிகாரியான எல்.வெளிபிட்டிய இன்று வந்து பார்வை இட்டு சென்று உள்ளதாக வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
நாளாந்தம் ஜந்துக்கு மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர் எனவும் அவ்வாறு வருபவர்கள் ஹட்டன் மிருக வைத்திய அதிகாரியின் கவனத்திற்கு அனுப்புவதாக கூறினர்.
சம்பந்தப்பட்ட திணைக்களம் மற்றும் அமைச்சர் முன் வந்து குறைந்த பட்சம் மூன்று வைத்தியர்கள் வாகன சாரதிகள் இரண்டு பேர் இந்த வைத்திய சாலைக்கு அனுப்பி இப்பகுதியில் உள்ள பண்ணையாளர்களின் நலன் பேண வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
http://www.max24news.com
2023.09.07