Saturday, September 9, 2023

நேற்று ஓட்டமாவடியில் இடம்பெற்ற விபத்தில் காவத்தமுனையைச் சேர்ந்த பன்னிரண்டு வயதான பாடசாலை மாணவி KF.ரீஹா வபாத்தானார்.

 


(மரதன்கடவல நிருபர்.என்.எம்.சல்மான்) 

அண்மையில் இடம்பெற்ற ஏறாவூர் புத்தக கொண்டாட்டத்தில் தியாகச் சுடர் எனும் தலைப்பில் ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டது. பலரதும் பாராட்டுக்களைப் பெற்ற இந்நாடகத்தில் வபாத்தான ரீஹா என்பவர் டாக்டர் வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார். இப்போது எங்களை விட்டுப் பிரிந்துள்ளார். ரீஹா மரணித்த விடயத்தை அதிபர் இஸ்மாயில் சேர் ஊடாக தெரிந்துகொண்டோம். 

மிகச் சிறிய வயது. துடிப்பானவரை விபத்தில் இழந்துள்ளோம். வாகனச் சாரதிகள் மிகவும் கவனமாக நடந்துகொள்ளுங்கள். உங்கள் வேகமும் ரேஸும் எங்களைக் காவுகொள்கின்றன. கெஞ்சிக் கேட்கிறோம். எல்லோருக்கும் எல்லாவற்றையும் தாங்கும் சக்தியும் இல்லை. எல்லோர் வீட்டிலும் சிறுவர்கள் இருக்கிறார்கள்.

ரீஹாவை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள் வாகன ஓட்டுனர்களே.. 

ரீஹாவுக்காகவும் இப்படி கவனயீனமாக விபத்துக்களால் உயிரிழந்தவர்களுக்கும் பிரார்த்தனைகள். 

http://www.max24news.com
2023.09.09
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured