Tuesday, November 7, 2023

மெக்ஸ்வல் அதிரடி‌ அவுஸ்திரேலியா அரையிறுதி போட்டிக்குள் பிரவேசம்.

 

செய்தி நிருபர் : (என்.எம்.சல்மான்)


ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்களினால் வெற்றியீட்டியது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 291 ஓட்டங்களை பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் இப்ரஹிம் சட்ரன் ஆட்டமிழக்காது 129 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பதிலுக்கு 292 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 46.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 293 ஓட்டங்களை பெற்று வெற்றியை தன்வசப்படுத்தியது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் மெக்ஸ்வல் ஆட்டமிழக்காது 201 ஓட்டங்களை பெற்று, அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

மெக்ஸ்வலின் ஆபார ஆட்டத்தின் ஊடாக, அவுஸ்திரேலிய அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

#foryou #followers
👉 விரிவான செய்திகளுக்கு 📰 
#Max02
http://www.max24news.com
2023.11.08
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured