Wednesday, May 31, 2017

வவுனியாவில் முஸ்லிம் நபர்களுக்கு சொந்தமான இரண்டு கடைகளுக்கு தீ வைப்பு.

வவுனியா மதினா நகர் பகுதியில் அமைந்துள்ள இரு முஸ்ஸிம் கடைகள் நேற்று இரவு இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா மதினா நகர் பள்ளிவாசலுக்கு அருகே அமைந்துள்ள முஸ்ஸிம் உணவத்தின் முன்பக்கம் தீயூட்டப்பட்டதுடன் அருகே இருந்த தொலைத்தொடர்பு வர்த்தக நிலையத்தின் விளம்பரப்பலகை, மின்குமிழ் என்பவற்றை இனந்தெரியாத நபர் சேதமாக்கிவிட்டு தப்பித்துசென்றுள்ளனர்.
இது தொடர்பில் இரு கடைகளின் உரிமையாளர்களும் மகாறம்பைக்குளம் பொலிஸ் நிலையத்தில் தெரிவித்த முறைப்பாட்டுக்கு அமைவாக, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured