Monday, September 11, 2023

36 ரயில் போக்குவரத்து சேவைகள் இன்று ரத்து!


(மரதன்கடவல நிருபர்.என்.எம்.சல்மான்)


குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் சம்பள அதிகரிப்பு தொடர்பான பிரச்சினையை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்படுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம்.சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (12) காலை 36 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து துணை பொது முகாமையாளர் எம்.ஜே. இதிபொலகே தெரிவித்தார்.

எனவே, சிலாபம், கணேவத்தை, அளுத்கமவில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் ரயில்கள் இன்று காலை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கொழும்பில் இருந்து இயக்கப்படவிருந்த பல குறுகிய ரயில் பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

ரம்புக்கன, பொல்கஹவெல, கண்டி, மஹவ, குருநாகல், காலி, அவிசாவளை ஆகிய பகுதிகளில் இருந்து ரயில்கள் பயணிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.max24news.com
2023.09.12
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured