Monday, September 11, 2023

கணவன், மனைவி இணைந்து செய்த சம்பவம்!


(மரதன்கடவல நிருபர்.என்.எம்.சல்மான்) 

துப்பாக்கியால் சுட்டு ,  கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகாயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக தேடப்பட்டு வந்த  சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குற்றத்திற்காக தேடப்பட்டு வந்த சந்தேக நபரும் கொலைக்கு உதவிய சந்தேக நபரின் மனைவியும் தங்காலை  குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று (11) ஹங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடிகல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

 காரில் பயணித்த நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு, கூரிய ஆயுதத்தால் தாக்கி  காயம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் கடந்த ஜூலை 11 ஆம் திகதி, ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 29 வயதுடையவர் எனவும் பெண் சந்தேகநபர் 23 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, ​​ஹம்பாந்தோட்டை மற்றும் ஹங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 3 கால்நடை திருட்டு சம்பங்களுடன் தொடர்புபட்டுள்ளமை  தெரியவந்துள்ளது.

சந்தேக நபருக்கு ஹம்பாந்தோட்டை மற்றும் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தினால் 06 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் நேற்றைய தினம் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

http://www.max24news.com
2023.09.12

Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured