நீதிமன்றத்திலிருந்து தப்பிக்க முயற்சி செய்த நபர் ஒருவர் மீது பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இன்று (27) காலை பொலிசாரினால் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்ட சிறைக்கைதி ஒருவர், பொலிசாரின் பிடியிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட வேளையிலேயே பொலிசார் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த கைதி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்தனகல்ல பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
