அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட டெங்கு நுளம்பு ஒழிப்பு பக்றீரியாவை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், டெங்கு நோய் குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மோனேஸ் பல்கலைக்கழக பேராசிரியரால் கண்டுபிக்கப்பட்ட குறித்த பக்றீரியா பயன்படுத்தப்பட்டமையால், அவுஸ்திரேலியாவின் பிர்ஸ்பேனில் டெங்கு நோய் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தை குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க மொனேஸ் பல்கலைக்கழகத்துடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
குடம்பிகள் தொடர்பான இலங்கையின் நிபுணர்களுடன் இணைந்து, அவுஸ்திரேலிய நிபுணரால் அந்த பக்றீரியாவை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய, குறித்த பக்றீரியாவை உருவாக்கி, நுளம்புகளுக்கு பரப்பப்படவுள்ளது.
அந்த பக்றீரியா மூலமாக டெங்கு நுளம்புகள் மரணிக்கும்.
இதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு உதவியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.
