நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தெரிவான சபை உறுப்பினர்களின் பெயர் பட்டியல் அடங்கிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று (15) இரவு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில், 11 மாவட்டங்களில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவான பிரதிநிதிகளின் பெயர் பட்டியல் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளதாக, அரசாங்க அச்சக திணைக்களத்தின் பொறுப்பதிகாரி கங்காணி லியனகே, தெரிவித்தார்.
ஏனைய மாவட்டங்களில் தெரிவான உறுப்பினர்களின் பெயர்கள் இன்றைய தினத்திற்குள் வெளியிடப்பட உள்ளன.
கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அடங்கிய பட்டியலை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்காக, கடந்த மார்ச் 09 ஆம் திகதி, தேர்தல் ஆணைக்குழுவினால் அரச அச்சக திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
