Monday, October 14, 2019

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ஹேமசிறிக்கு அழைப்பு


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவிற்கு, அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 18 ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்கு ஹேமசிறி பெர்ணான்டோவை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹேமசிறி பெர்ணான்டோவிற்கு சிறைச்சாலை ஆணையாளரின் ஊடாக குறித்த அறிவித்தல் இன்று (15) மேற்கொள்ளப்படவுள்ளது.

மக்கள் வங்கியின் தலைவராக ஹேமசிறி பெர்ணான்டோ செயற்பட்ட 2016,2017 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மக்கள் வங்கிக்கு கணினிகள் கொள்வனவு செய்ததில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய இதன்போது அவரிடம் சாட்சியம் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
Share:
Location: Kekirawa, Sri Lanka

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured