அனுராதபுரம் பதவிய பிரதேச மீனவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பதவிய பிரதான
குளத்திற்கு மூன்று இலட்சம் மீன் குஞ்சிகளை அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
இஷாக் ரஹுமான் பெற்றுக்கொடுத்தார்.
பதவிய பிரதேச மீனவர்கள் மிக நீண்டகாலமாக எதிர்கொண்ட பிரச்சினைகள் யாவும் இன்று
பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் மற்றும் பதவிய பிரதேச செயலாளர், பதவிய பிரதேச
பொலிஸ் ASP ஆகியோர்
முன்னிலையில் கலந்துரையாடப்பட்டது.
பதவிய பிரதேச மக்களுக்கு முக்கியமான பிரச்சினையாக விளங்கிய மீன்
பற்றாக்குறைக்கு மூன்று இலட்சம் மீன் குஞ்சிகளை வழங்கி தீர்வை பெற்றுக்கொடுத்த பாராளுமன்ற
உறுப்பினர் இஷாக் ரஹுமான், அங்கு கலந்துரையாடப்பட்ட ஏனைய பிரச்சினைகளுக்கும்
தன்னாலியன்ற அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக கூறினார்.
மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில் “இன, மத, குல பேதங்களை மறந்து
அனைத்து சமூகத்தினருக்கும் தன்னாலியன்ற அனைத்து உதவிகளையும் தான் கட்டாயம்
செய்வேன் என்றும், தேர்தல் காலங்களில் மட்டும் வந்து வீர வசனம் பேசும் சொல்வீரன் அல்ல நான், எனது
தேர்தலுக்கு இன்னும் 2 வருடங்கள் இருக்கின்றன, தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா
என்ற முடிவு கூட நான் இன்னும் எடுக்கவில்லை என்றும் மக்களின் குறைகளை தேடியறிந்து
நிறைவு செய்து வரும் செயல் வீரன் நான்” என்றும் தெரிவித்தார்.
நிகழ்வில் கலந்துகொண்ட அப்பிரதேச மீனவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக்
ரஹுமானை நன்றி வார்த்தைகளால் மெச்சியதோடு, இனிவரும் தேர்தல் காலங்களில் தங்கள்
ஆதரவு உமக்காகவே இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
ஐ.எம்.மிதுன் கான் (ஊடக இணைப்பாளர் - பா.உ.இஷாக் ரஹுமான்)
ஐ.எம்.மிதுன் கான் (ஊடக இணைப்பாளர் - பா.உ.இஷாக் ரஹுமான்)