எமது நாட்டை எதிர்காலத்தில் வளமானதாக கட்டியெழுப்பும் பொறுப்பும், கடமையும்,
திறமையும் இன்றைய இளைஞர்களிடமே தங்கியிருக்கின்றது. ஆகவே அவர்களது தேவைப்பாடுகள்
தொடர்பில் அரசு அதிகம் கவனம் செலுத்த வேண்டும். நிக்கவரெட்டியவில் நடைபெற்ற
யொவுன்புர நிகழ்ச்சித்திட்டத்தில் அனுராதபுரத்திலிருந்து சென்று பங்கு
பற்றியிருந்த இளைஞ்சர்கள் முன்னிலையில் உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர்
இஷாக் ரஹுமான் இவ்வாறு தெரிவித்தார்
தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றுகையில் தனது பிரதேசமான அனுராதபுர மாவட்ட
இளைஞர்கள் தொடர்பில் தான் அதிகம் கவனம் செலுத்துவதாகவும், விளையாட்டு, கல்வி
துறைகளில் அவர்களது பங்கு அதிகமாய் காணப்பட வேண்டும் என்றும், அதற்காய்
தன்னாலியன்ற அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தான் தயாராக இருப்பதாகவும்
குறிப்பிட்டிருந்தார்.
நிகழ்வில் கலந்து கொண்ட அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக்
ரஹுமான் அனுராதபுர இளைஞர்களின்
குறைநிறைகளை அவ்விடத்தில் கேட்டறிந்து அவற்றுள் சிலவற்றுக்கான தீர்வுகளை உடன்
வழங்கியதோடு, ஏனையவர்களின் கோரிக்கைகளையும் முடிந்தளவில் வேகமாய்
முடித்துத்தருவதாகவும் இளைஞர்ளிடம் பொருந்திக்கொண்டார்.