Sunday, April 8, 2018

இலங்கை மகளிர் கிரிக்கெட்டின் தலைவியானார் ஹஷான் மனைவி

இலங்கை மகளிர் கிரிக்கெட்டின் புதிய தலைமை பொறுப்பில், முன்னாள் இலங்கை வீரர் ஹஷான் திலகரத்னவின் மனைவி அப்சரி திலகரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
அப்சரி திலகரத்ன, மகளிர் கிரிக்கெட் அணியின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து மகளிர் கிரிக்கெட்டின் தலைமை பொறுப்பிற்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரி ஒருவர் கூறுகையில், சில நாட்களுக்கு முன்னர் அப்சரி திலகரத்ன, இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் திலங்க சுமதிபாலாவை சந்தித்து, தனது பதவி உயர்வுக்கான நியமன ஆணையைப் பெற்றார் என தெரிவித்துள்ளார்.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு அப்சரியின் பங்கு மிக முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இலங்கை மகளிர் அணி அண்மைக்காலமாக சோபிக்க தவறி வருகிறது. கடைசியாக இலங்கை சுற்றுப்பயணம் வந்த பாகிஸ்தான் மகளிர் அணியிடம் இலங்கை அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் தோல்வியை சந்தித்தது. 
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured