
மீரிஹான பொலிஸ் விசேட பிரிவின் அதிகாரிகளினால் ஹிம்புட்டான, அங்கொட ஆகிய பிரதேசங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேக்கர தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து ஒரு தொகை கஞ்சா மற்றும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட மாகந்துர மதுஷ் மற்றும் அங்கொட லொக்க ஆகியோர் தற்போது வௌிநாட்டுக்கு தப்பிச்சென்றுள்ளனர் என்று தகவல்கள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.