Saturday, May 19, 2018

நாட்டைச்சூழ தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலை

நாட்டைச்சூழவுள்ள பகுதிகளில் தென்மேல் பருவப்பெயர்ச்சி நிலை, நிலைகொண்டுள்ளதால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் (2.00 மணியின் பின்னர்) மழை பெய்யும் வாய்ப்புக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் மேல், தென், சப்ரகமுவா, மத்திய, வட மேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதோடு, ஏனைய பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
குறிப்பாக நாட்டின் மத்திய, சப்ரகமுவா, ஊவா, மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றரிலும் (10 செ.மீ.) அதிகமான பாரிய மழை பெய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவா, மத்திய மாகாணங்களின் ஒரு சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்ட நிலையை எதிர்பார்க்கலாம் என வளி மண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், குறித்த பிரதேசத்தில் காற்றின் வேகம் தற்காலிகமாக அதிகரிக்கலாம். மின்னல் தாக்கத்தின் மூலமான பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பு பெறும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டைச்சூழவுள்ள கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு மற்றும் நாளை (20) முதல் நாட்டின் தென் மேல் கடல் பகுதிகளில் மழையுடனான நிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
Image result for rainy at srilanka

Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured