திறப்பனை பிரதேச
சபைக்கு உட்பட்ட பமுனுகம கிராம மக்கள் மிக நீண்டகாலமாக தங்களுக்கென ஓர் மக்கள் மண்டபம் இல்லாதா பிரச்சினைக்கு முகம் கொடுத்து வந்தனர். இது குறித்து திறப்பனை பிரதேச சபை உப தலைவர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானிடம் குறித்த கிராமத்திற்கான ஓர் மக்கள் மண்டபத்தை அமைத்துக்கொள்வதற்கான வேண்டுகோளை விடுத்திருந்தார்.
அதனடிப்படையில்
பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் நிதியோதுக்கீட்டின் மேல் குறித்த மக்கள் மண்டப கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு
2018.07.14
அன்று மக்கள் பாவனைக்காக பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானினால் உத்தியோகபூர்வமாக
திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில்
திறப்பனை பிரதேச சபையின் உப தலைவர் முஜிபுர்ரஹ்மான், திறப்பனை பிரதேச சபை
உறுப்பினர்களான மரியா லியனகே, நதீகா செவ்வந்தி மற்றும் பமுனுகம கிராம சேவகர்
லக்ஸ்மன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கட்டிடமானது தற்காலிகமாக அப்பிரதேச மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புக்கள் நடாத்துவதற்கு பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இக்கட்டிடமானது தற்காலிகமாக அப்பிரதேச மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புக்கள் நடாத்துவதற்கு பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இங்கு பிரதம
அதிதியாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் உரையாற்றுகையில்,
கல்யில்
அனுராதபுர மாவட்டம் சற்று பின்னடைந்த நிலையில் காணப்படுவது மிகவும் கவலைக்குரிய
விடயமே. அவற்றுக்கு பல காரணங்கள் காணப்படுகின்றன. மாணவர்களுக்கு சரியான
வழிகாட்டலின்மை, பெற்றோர்களது கவனம் மாணவர்களின் பக்கம் குறைவாக இருத்தல்,
பாடசாலைகளில் கற்றலுக்கான போதிய வசதிகளில்லாமை என பல காரணங்கள் இருக்கின்றன.
அவற்றுக்கு
நாங்கள் சிறுது சிறுதாக அபிவிருத்தி நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றோம்.
அனுராதபுர மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய கிராமங்களில் உள்ள பல பாடசாலைகளுக்கு புதிய கட்டிட வசதிகளை ஏற்படுத்திகொடுத்திருக்கின்றோம்.
இன்னும் சில பாடசாலைகளுக்கான கட்டிடங்கள் வந்தடையவிருக்கின்றன.
ஆகவே இன்னும் சில
காலங்களில் பாடசாலைகளில் நிலவும் குறைகளை நாங்கள் முற்றாக சீர் செய்து விடுவோம்.
ஆனால் அவை மற்றும் மாணவர்களின் கல்வியின் முன்னேற்றத்திற்கு போதாதது. பெற்றோர்களான உங்களிடத்திலேயே அதிகமான பொறுப்பு
காணப்படுகின்றது.
தமது பிள்ளை 5
ஆம் தர புலமை பரீட்சையில் சித்தியடையும் வரை எவ்வளவு கஷ்ட்டப்பட்டு அவர்களுக்கு
ஒத்துழைப்பாக நின்று அவர்களை சித்தியடைய வைக்கின்றோமோ அன்றோடு அவர்களின் மேல்
எமக்குள்ள கவனத்தை விட்டு விடுகின்றோம். இதுவே பெற்றோர்களின் மிகப்பெரிய
தவறாகும்.
தரம் 5 வரை தங்களது பிள்ளைகள்
மீது பெற்றோர்கள் எவ்வாறு கவனம் செலுத்தினார்களோ அதேபோன்று உயர்தரம் கற்று
பல்கலைக்கழகம் செல்லும் வரை நாம் நம் பிள்ளைகள் மீது அவதானம் செலுத்தினால் மாத்திரமே
எமது பிள்ளை கல்வியிலும் சரி, ஒழுக்கத்திலும் சரி சிறந்து விளங்குவார்கள் என்பதில்
எவ்வித ஐயமுமில்லை.
ஆகவே இதுகுறித்து
பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஐ.எம்.மிதுன்
கான் – கனேவல்பொல