மெக்ஸிக்கோவின் மேற்குப் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
El Aguaje பகுதியில் நீதிமன்ற உத்தரவொன்றை நிறைவேற்றுவதற்காகச் செல்லும்போது, அவர்கள் சென்ற வாகனத் தொடரணி மீது பதுங்கியிருந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்நாட்டின் பலம்பொருந்திய குற்றவாளிக் கும்பலான Jalisco Nueva Generacion Cartel இந்தத் தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என நம்பப்படுகின்றனது.
இந்தத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களைக் கண்டறியும் நடவடிக்கையில் அனைத்துத் தரப்பினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மெக்ஸிக்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இடையில் மோதல்கள் இடம்பெறும் பகுதியாக El Aguaje நன்கறியப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.