Wednesday, October 16, 2019

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் கங்குலி



இந்திய அணியின் முன்னாள் தலைவரான சௌரவ் கங்குலி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகின்றது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கான தேர்தல் எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தலில் சௌரவ் கங்குலி போட்டியிடவுள்ளார்.
இந்தியாவுக்காக 311 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கங்குலி, அதில் 22 சதங்களுடன் 11363 ஓட்டங்களை குவித்துள்ளார்.
இந்திய அணியின் தலைவராக 5 வருடங்கள் செயற்பட்ட பெருமையும் சௌரவ் கங்குலியை சாரும்.
47 வயதான சௌரவ் கங்குலி தற்போது பெங்கால் கிரிக்கெட் சங்கதத்தின் தலைவராகக் கடமையாற்றுகின்றார்.
சௌரங் கங்குலி தலைமையிலான இந்திய அணி 2003 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured