பலத்த மழையுடன் கூடிய வானிலையினால் நீர்ப்பாசனத் திணைக்களத்துக்கு சொந்தமான 16 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அனைத்து நீர்த்தேக்கங்களினதும் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன தெரிவித்துள்ளார்.
நீர்ப்பாசனத் திணைக்களத்துக்கு சொந்தமான நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 34 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, மேற்கு, தெற்கு, தென் கிழக்குப் பகுதிகளில் இன்று (30) பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.