Wednesday, October 16, 2019

மருத்துவர்களின் "20 யோசனைகள்" மத்தும பண்டாரவிடம் கையளிப்பு



அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் தயாரிக்கப்பட்ட ´20 யோசனைகள்´ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நேற்று (15) பிற்பகல் இந்த சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களால் இந்த யோசனைகள் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் மிகவும் பயனுள்ள திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இது தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கொழும்பில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அதிகாரிகளால் இந்த ´20 யோசனைகள்´ கையளிக்கப்பட்டுள்ளது.
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured