Tuesday, October 8, 2019

ஒரு தடவை எங்களுக்கு அதிகாரத்தை தாருங்கள்



நாட்டை கட்டியெழுப்புவதானால் திருடர்கள் அற்ற ஆட்சியொன்றை கட்டியெழுப்ப வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தம்புத்தேகமவில் நேற்று (08) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க, வேட்புமனுத் தாக்கல் செய்ததன் பின்னர் கலந்து கொண்ட முதலாவது மக்கள் சந்திப்பு இதுவாகும்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், திருட்டை ஒழிக்க ஒரு தடவை தனக்கு அதிகாரத்தை வழங்குமாறு தெரிவித்திருந்தார்.

பொதுமக்களின சொத்துக்களில் ஒரு சதத்தையேனும், தான் திருடவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் காரணமாக ஆட்சியாளர் திருடக்கூடாது எனவும், ஆட்சி திருட்டு இல்லாத ஆட்சியாக இருக்க வேண்டும் என தெரிவித்த அவர், அதனை யாருக்கு செய்ய முடியும் எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured