Wednesday, October 30, 2019

கோட்டா வெற்றிப் பெற்றால் ஐ.தே.க - க்கு பல வருடங்களுக்கு ஆட்சியமைக்க கிடைக்காது



இம்முறை கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்றால் இனி பல வருடங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆட்சியமைக்க முடியாது போகும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

வத்தளை பிரதேசத்தில் நேற்று (29) இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இந்த தேர்தலில் கோட்டாபயவிற்கு வெற்றியை கொடுத்தால் எதிர்வரும் 25 -30 வருடங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் ஒன்றை காணக்கிடைக்காது. எமது வாழ் நாள் முழுவதும் அதனை காணக்கிடைக்காது.

அப்போது ஹரின் பெர்னாண்டோ போன்றவர்களுக்கு 80 வயதாகிவிடும்.

அதன் காரணமாக நிச்சயமாக கம்பஹா மாவட்டத்தை வெற்றிப் பெறச் செய்ய வேண்டும் என்றார்.
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured