இராஜாங்க அமைச்சர் பதவியில் தொடர்ந்தும் செயற்படப்போவதாக இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியினால் முடிந்தால் தன்னை பதவியில் இருந்து நீக்கி காட்டுமாறு அவர் சவால் விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.