மாகாண சபைகள், பொதுமக்கள் பிரதிநிதிகளால் அன்றி தனி ஒருவரின் அதிகாரத்தின் கீழ் நீண்ட காலமாக நிலவுவது, சர்வாதிகாரத்திற்கான படிக்கல்லாக அமையும் என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக, மாகாண சபை தேர்தல் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என அதன் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நேற்று நள்ளிரவு முதல் ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், தற்போது நாட்டின் அனைத்து மாகாண சபைகளும் ஆளுநர்களின் அதிகாரத்திற்கு கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பல், அத தெரண செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்த போது நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்தார்.