Sunday, October 27, 2019

வேட்பாளர்கள் இனவாதம் மற்றும் மதவாதம் சார்ந்த கருத்துக்களை தெரிவிப்பு?



ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தெரிவிக்கும் குரோதத்தை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை பிரச்சாரம் செய்யாதிருக்க அனைத்து ஊடகங்கள் மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தெரிவிக்கும் சில கருத்துககளால் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு பாரிய அநீதி இழைக்கப்படுவதராக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

வேட்பாளர்கள் இனவாதம் மற்றும் மதவாதம் சார்ந்த கருத்துக்களை தெரிவித்து வருவதாக குறித்த தேர்தல் கண்காணப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured