
காவல்துறை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்படி கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதன்போது, குறித்த சந்தேக நபர் வழங்கிய தகவலுக்கு அமைய பொல்கொட ஆற்றின் கரையோரத்தில் இருந்து சட்டவிரோத மதுபான தயாரிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட கோடா 655 லீட்டரும் செப்பு நாணயங்கள் சிலவற்றையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
31 வயதுடைய குறித்த சந்தேக நபர் பானதுரை பகுதியில் வசித்து வருவதோடு, சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.