Friday, October 25, 2019

ஓட்டமாவடியில் சஜித்தின் அலுவலகத்தினை திறந்தார் றிசாட்



ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரித்து ஒட்டமாவடி பிரதான வீதியின் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் நேற்றிரவு (25) கட்சி காரியாலயம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் பிரதம அதிதியதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கைத்தொழில் வர்த்தக நீண்ட நாள் இடம்பெயர்வு கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

மேலும் விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, துறைமுக மற்றும் கப்பல் துறை பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்றூப், நுகர்வோர் அதிகார சபை உறுப்பினர் சட்டத்தரணி எம்.அன்சில் மற்றும் முக்கிய அரசியல் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured