Friday, October 25, 2019

வருடத்தின் 365 நாட்களும் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்



ஜனாதிபதிக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் பொதுமக்களுக்கு வழங்குவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி ​வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பெலிஅத்த பொது மைதானத்தில் நேற்று (25) இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டின் பொதுமக்களின் வாக்குகளில் நியமிக்கப்படும் ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியும் நாடு, மக்கள், பொது சேவை ஆகிய விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கக்கூடிய வகையில் புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை எதிர்வரும் 16 ஆம் திகதியின் பின்னர் ஆரம்பிக்கவுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

அதேபோல், போலி அரசியலுக்கு தனது பொது பிரதிநிதித்துவத்தை பயன்படுத்துபவர்களை அரசியல் துறையில் இருந்து முழுவதுமாக நீக்குவதாக தெரிவித்த அவர், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதி முறையை இரத்து செய்வதாக தெரிவித்தார்.

குறித்த பணத்தை கொண்டு பொதுமக்களுக்கு சேவை செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், நாடு பூராகவும் சென்று பொது மக்களின் கஷ்ட நஷ்டங்களை கேட்டறிந்து வருடத்தின் 365 நாட்களும் சேவை புரிய அர்ப்பணிப்பதாக சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured