விவசாய சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே தமது அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
வெலிமடை, கெப்பெட்டிபொல பிரதேச சபை மைதானத்தில் நேற்று (25) இடம்பெற்ற மக்கள் சந்திப்பல் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த கோட்டாபய ராஜபக்ஷ, தமது அரசாங்கத்தின் கீழ் வௌிநாட்டு விவசாயிகள் பாதுகாக்கப்பட மாட்டார்கள் எனவும், உள்நாட்டு விவசாயிகளை பாதுகாப்பதாக உறுதியளிப்பதாகவும் தெரிவித்தார்.
அதேபோல், புதிய தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்தி விவசாயத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது தெரிவித்தார்.