(மரதன்கடவல நிருபர்.என்.எம்.சல்மான்)
கருத்தில் கொண்டு, முதல் போட்டி இன்று (செப். 09) நடைபெறவுள்ள நிலையில், சிறப்பு போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படும். 2023 செப்டெம்பர் 09, 10, 12, 14, 15, மற்றும் 17 ஆம் திகதிகளில் திட்டமிடப்பட்ட போட்டிகளுக்காக போக்குவரத்துத் திட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த தினங்களில் மதியம் 12 மணி முதல் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர். போட்டிக்கான விசேட அனுமதிப்பத்திரம் உள்ளவர்கள் மற்றும் சாதாரண பார்வையாளர்களுக்கான போக்குவரத்து திட்டத்தை பொலிஸார் அறிவித்துள்ளனர். கிரிக்கெட் போட்டிகள் காரணமாக அதிக வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், மற்ற வாகன சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
http://www.max24news.com
2023.09.09