Saturday, September 9, 2023

சனல் 4 வீடியோ விவகாரம் - பாதுகாப்பு விடுத்துள்ள அறிக்கை


(மரதன்கடவல நிருபர்.என்.எம்.சல்மான்) 

செனல் 4 காணொளி ஊடாக முன்வைக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பாதுகாப்பு அமைச்சு கடுமையாக நிராகரித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான செனல் 4 இன்  நிகழ்ச்சியின் மூலம் இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் உண்மை, நீதி மற்றும் தேசத்தின் நலனுக்காக
அரசாங்கத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்துவதாகவும் பாதுகாப்பு அமைச்சு இந்த அறிவிப்பின் மூலம் கூறுகிறது.

மேலும், எந்தவொரு நபரும் அல்லது நிறுவனமும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை பாதுகாப்பு அமைச்சகம் மதிக்கிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், செனல் 4 வழங்கிய ஆதாரமற்ற, தீங்கிழைக்கும் மற்றும் பலவீனமாக நிரூபிக்கப்பட்ட கூற்றுகளிலிருந்து எழும் திட்டமிடப்படாத செயல்கள் அல்லது விளைவுகளுக்கு செனல் 4 பொறுப்பேற்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சகம் வலியுறுத்துகிறது.

http://www.max24news.com
2023.09.09
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured