(மரதன்கடவல நிருபர்.என்.எம்.சல்மான்)
ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போட்டி குறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார் அளித்ததாக ஆப்கானிஸ்தான் கிரிகெட் அணியின் செய்தி தொடர்பாளர் முகமது நசீம் சதாத் தெரிவித்துள்ளார்.
2023 ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தான் குழு B இல் விளையாடியது. ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
செவ்வாய்கிழமையன்று ஆப்கானிஸ்தான் அணி இலங்கைக்கு எதிராக விளையாடியது. நாணய சுழற்ச்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 292 என்ற இலக்கை நிர்ணயித்தது.
சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற, ஆப்கானிஸ்தான் 37.1 ஓவரில் இலக்கை துரத்த வேண்டும். இருப்பினும், ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில், ஆப்கானிஸ்தான் 9 விக்கெட்டுகளை இழந்து 289 ஓட்டங்களை எட்டியபோது, 37.1 ஆவது ஓவரில் அடுத்த மூன்று பந்துகளுக்கு ஆறு ஓட்டங்களை பெற்றால் ஆப்கானிஸ்தான் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது என போட்டியின் வர்ணனையாளர்கள் தெரிவித்தனர்.
ஆனால், அடுத்த மூன்று பந்துகளில் 295 ரன்களை எட்டினால், சூப்பர் 4-க்கு வரலாம் என்ற கணக்கை களத்தில் இருந்த ஆப்கானிஸ்தான் வீரர்கள் அறிந்திருக்கவில்லை.
இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகளை தண்டிக்க ACB கேட்டுக்கொள்கிறது என்றும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஊழியர்கள் அலட்சியமாக இருந்தது நிரூபிக்கப்பட்டாலும், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் சதாத் கூறினார்.
http://www.max24news.com
2023.09.07