Thursday, September 7, 2023

தன்னை தானே ஆட்டத்தில் இருந்து நீக்கிய Sangakkara. 39 ஆண்டுகளுக்கு பிறகு அபூர்வ நிகழ்வு...


(மரதன்கடவல நிருபர்.என்.எம்.சல்மான்) 

IPL Season 5 போட்டித் தொடர் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் கேப்டன் குமார் சங்ககாரா விளையாடவில்லை.

தனது பேட்டிங் மோசமாக இருப்பதால் அவர் தன்னை தானே அணியில் இருந்து நீக்கிக் கொண்டார்.

இப்படி நடப்பது அபூர்வமானதாகும். 39 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து கேப்டன் மைக் டென்னஸ் மோசமான ஆட்டம் காரணமாக ஆசஷ் தொடரின் சிட்னி டெஸ்டில் தன்னை தானே நீக்கி கொண்டார்.

அதுபோல தற்போது ஐ.பி.எல். போட்டியில் சங்ககரா நடந்து கொண்டார்.

அவர் இந்த ஐபிஎல் சீஸனில் மொத்தம் 83 ரன்களே எடுத்துள்ளார். கேமரோன் ஒயிட் நேற்றைய ஆட்டத்தில் கேப்டனாக பணிபுரிந்தார்.

http://www.max24news.com
2023.09.07
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured