கொழும்பு நகரில் 170 கோடீஸ்வரர்கள் உள்ளதாக பிரித்தானியாவிலுள்ள ஆய்வு நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஒரு கோடி அமெரிக்க டொலருக்கும் அதிகமான சொத்துக்களுக்கு உரிமைய கூறும் கோடீஸ்ரர்கள் 170 பேர் கொழும்பு நகரில் மாத்திரம் வாழ்வதாக பிரித்தானியாவின் Knight Frank நிறுவனம் தெரிவித்துள்ளது.
2016ஆம் ஆண்டின் உலக பணக்காரர்கள் பட்டியலை (The wealth report) வெளியிட்டு இந்த தகவலை குறிப்பிட்டுள்ளது.
முழு இலங்கையிலும் 10 இலட்சம் அமெரிக்க டொலருக்கும் அதிக சொத்துக்களுக்கு உரிமை கூறும் பணக்காரர்கள் 5000 பேர் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பில் மாத்திரம் 10 இலட்சம் அமெரிக்க டொருக்கும் அதிகமான சொத்துக்களுக்கு உரிமையாளரான 3400 பேர் வாழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த எண்ணிக்கை 2026ஆம் 13000 வரை அதிகரிக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் பணக்கார வர்த்தகர்கள் 7 பேரின் பெயர் பங்கு சந்தை கொடுக்கல் வாங்கல்களுக்கமைய வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கைக்கமைய 10 இலட்சத்திற்கும் அதிக சொத்துக்களுக்கு உரிமை கூறும் பணக்காரர்கள் அதிகமாக உள்ள நகரமாக நிவ்யோர்க் (15180) பெயரிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் இராண்டாவது இடத்தில் லண்டன் (12070) பெயரிடப்பட்டுள்ளது.
