நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்தில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள பிரமுகர்களின் பாதுகாப்பை மீளவும் உறுதி செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகத் தெரியவருகின்றது.
பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை பொலிஸ் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நல்லூர்ப் பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரது துப்பாக்கியைப் பறித்து அவரைச் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வரும் பிரமுகர்களின் பாதுகாப்பு தொடர்பில், இந்தச் சம்பவத்தின் பின்பு மீளாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
வழங்கப்படுகின்ற பாதுகாப்பு போதுமானதா ? மேலும் பாதுகாப்பு வழங்கவேண்டிய தேவை உள்ளதா ? என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகத் தெரியவருகின்றது.
