இந்திய கிரிக்கட் அணி வீரர்களின் சம்பளம் 6 மடங்கு வரை அதிகரிப்பு. இதனால் A தரத்தில் உள்ள வீரர்களான கொஹ்லி மற்றும் தோணி ஆகியோருக்கு வருடத்திற்கு 12 கோடி வரை சம்பளம் கிடைக்கலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது.
கிரிக்கட் வீரர்களை 3 பிரிவுகளாக பிரித்து சம்பளம் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த அடிப்படையில் A தரத்தில் உள்ள வீரர்களுக்கு 2 கோடியும், B தரத்தில் உள்ள வீரர்களுக்கு 1 கோடியும், C தரத்தில் உள்ள வீரர்களுக்கு 50 இலட்சமும் வழங்கப்பட்டு வருகின்றது.
கிரிக்கட் வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் கடந்த செப்ட்டம்பர் மாதத்துடன் நிறைவுற்றதுஇதையடுத்து புதிய ஊதிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள கிரிக்கட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதன் போதே மேற்படி தகவல்கள் வெளியாகின.
